பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா கஷ்டப்படுத்துகிறபோதுதான் மல ஜலம் கழிப்பதும்; இப்படி அந்தந்த நேரத்திலிருந்து விடுபடுகிற நோக்கத்தில்தான் உடலுக்கான காரியங்களில் ஈடுபடுகின்றனர். பாடுபடுகின்றனர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். அதோடு மனித உடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உடலைக் கொண்டாடுங்கள். உடலானது மகிழ்ச்சியுடன் தன்னைக் கொண்டாடிக் காப்பவர்களுக்குத்தான், உன்னதமான 9Ꮲ_Ꭷ85 இன்பங்களை யெல்லா வாரி வழங்குகிற அமுதசுரபியாக, அட்சய பாத்ரி: எக விளங்குகிறது. நல்ல உடலுக்குத்தான் எந்த ஆடையும் பொருந்தும். நல்ல உடலுக்குத்தான் உணவின் குணமும் மணமும் சுவையும் ரசனையும் தெரியும். நோய்ப்பட்ட வாயின் நோக்காடுதான் உங்களுக்குத் தெரியுமே!. உடல் நலமில்லாதவர்க்கு வீடும் நரகம் தான். வீடு என்றால் சொர்க்கம் என்று அர்த்தம். சொர்க்கமாக இருக்க வேண்டிய வீடு, நோய் வாய்ப்படும்போது கொடிய நரகமாகும். சிறை போல காராகிருகமாகும்.

  • கவர்ச்சியாகத் தோற்றமளிக்க
  • கம்பீரமாக வாழந்து காட்ட
  • காண்பவர்கள் மதிக்கும் தோரணை பெத்
  • வாழ்நாள் எல்லாம் வளமாக வாழ
  • உற்சாகமாக உழைத்து உயர்வு பெற