பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 () o * -- fo & ; : o o உடலுக்கு அழகு கரும் டைட் பல இற்சிகள் 3. எதற்காக உடற்பயிற்சி செய்கிறோம்? உடலைப் பதப்படுத்த, இதப்படுத்த, சுகப்படுத்தத்தான் உடற்பயிற்சி செய்கிறோம். உடலுக்குப் பயிற்சி என்றால் என்ன? உடலை இயக்குவது. உடலுறுப்புக்களை சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்பட வைப்பது. இதுநாள் வரையில், எல்லோருக்கும் இருக்கும் கருத்து ஒன்றே ஒன்றுதான். அதுவும் இப்படித்தான். உடலை இயக்குவது மட்டும்தான் உடற்பயிற்சி என்றால், நாங்கள் தினந்தோறும் நடக்கிறோமே! வீட்டு வேலைகள் செய்கிறோமே! அலுவலகங்களில் கூட சுறுசுறுப்பாக அங்குமிங்கும் அலைந்து பணியாற்று கிறோமே! இவை போதாதா? இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இவ்வாறு பேசுவோர், கல்வி அறிவில்லாதவர் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்? ம்ஹாம். நிறையப் படித்த மேதைகள் கூட இப்படித்தான் தவறாக எண்ணி வாழ்கிறார்கள். மற்றவர்களிடமும் இப்படியே பேசிப் பேசி தவறான வழி காட்டுகிறார்கள். மற்றவர்களிடமும் இப்படியே பேசி வழி தவறாகத் தூண்டிவிடுகிறார்கள்.