பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 2 | அவர்கள் செய்யும் அடிப்படையான தவறு இதில் என்னவென்றால், உடலின் இயக்கம் எல்லாம் எப்போது, உடற்பயிற்சி ஆகின்றது என்கிற உண்மையை உணராதிருப்பதுதான். நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்மை அறியாமலே நமது கைகள், பேசும் பொருளுக்கு ஏற் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைகின்றன. உடலானது முன்னும் பின்னும் போய் வருகிறது. சற்று மேலே எழும்புகிறது. இறங்கி வருகிறது. அனிச்சை செயல்களாகத்தான் எல்லாம் நடக்கிறது. இப்படி, நம்மையறியாமல், நமது உடலில் இயக்கம் ஏற்படுகிறதே. அதற்குப் பெயர் இயக்கம் (Move:n). இந்த இயக்கத்தைத்தான் எல்லோரும் செய்கின்றார் களே! இதற்குப் பெயர் உடற்பயிற்சி அல்ல. இயற்கையாய் நடக்கும் அனிச்சைச் செயல்கள். அப்படியா என்று ஆச்சரியத்தில் குரலெழுப்பிவிட்டு: "நாங்கள் செய்கிற காரியங்களைப் பாருங்கள். தண்ணீர் இழுக்கிறோம். எடைகளைத் துக்குகிறோம். வீட்டு வேலைகள் எல்லாம் விடாமல் செய்கிறோம். இதெல்லாம் உங்களுக்கு உடற் பயிற்சியாகத் தெரியவில்லையா என்கிறார்கள்' சற்று விவரமானவர்கள் இவர்கள். நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாம், உடலைப் பயன்படுத்திப் பண்ணுகிற செயல்கள் இவை எல்லாம் உடலுக்குப் பயன் தருகின்ற பயிற்சியல்ல. வேலைகள்.