பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.1 - " உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் நமது அடிப்படை உடலின் அமைப்பு செல் (Cell) இந்த செல்லின் உண்மையான வேலை ன்னவென்றால் ஒரு செல் இரண்டு செல்களாகப் ரிேவது. இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக, பதினாறு முப்பத்தி இரண்டாக இப்படி பிரிந்து வளர்ந்துதான், உடலை உருவாக்குகிறது. பல்லாயிரக்கணக்கான செல்கள் சேர்ந்து உருவாகிற அமைப்புக்கு திசுக்கள் (Tissues) என்று பெயர். பலவிதமான திசுக்கள் சேர்ந்து உருவாக்குகிற அமைப்புக்கு உறுப்பு (Organ) என்று பெயர். பல உறுப்புகள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து, ஒன்றுக்கொன்று ஆதாரமாக, அணிகலமாக அமைந்து, அபூர்வமாகப் பணியாற்றுகின்ற அமைப்புக்கு மண்டலம் (System) என்று பெயர். இதுபோல, ஒன்பது மண்டலங்கள் நமது உடம்பிலே உள்ளன. அவை தசை மண்டலம், எலும்பு மண்டலம், சுவாச மண்டலம், இரத்த ஒட்ட மண்டலம், ஜீரண மண்டலம், சுரப்பிகள் மண்டலம் கழிவகற்றும் மண்டலம், பிறப்பு தொடர்பான மண்டலம் எனப் பலவகையில் பிரிந்து, உடலை பதப்படுத்தி, பலப்படுத்தும் பணிகளில் பரிபூரணமாக உழைக்கின்றன. உறுதிப்பாட்டையும் உயர்த்திக் காக்கின்றன. நாம் நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, உடலுறுப்புக்களை நன்றாக இயக்கிச் செய்கின்ற உடற்பயிற்சியின்போது, காற்று அதிகமான காற்றை இழுக்க, காற்றிலிருந்து பிராண வாயுவைப் பெற,