பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| " - 2 J பக்டர் தவராஜ் செல்லையா பிரிக்கப்பட்டு பிராணவாயுவாக இரத்தத்துடன் சே, இரத்தமானது. தான் ஒடும் வேகத்துடன் இன்னும் அதிகமான வேகம் பெற்று. உடல் எங்கும் உள்ள செல்களை நோக்கி வேகமாக ஓடுகின்றது. இரத்தம் வேகமாக ஓடுவதால் என்ன லாபம்? செல்கள் எல்லாம். வானம் பார்த்த பூமி. மழைக்கு ஏங்குவது போல, காற்றும் உணவும் கலந்திருக்கும் இரத்தத்தின் வரவை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. o ஏற்கனவே உழைப்பில் ஈடுபட்டிருக்கும் செல்களில் பிராணவாயு எரிந்து, கரியமல வாயுவானது கலந்து, களைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட செல்களை நோக்கித்தான் இரத்த ஒட்டம் போய் புகுந்து நிரப்புகின்றன. செல்களுக்குப் புதிய தூய இரத்தத்தைக் கொடுத்து விட்டு, அவற்றில் தேங்கியிருக்கின்ற கரியமல வாயு, லேக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கெை: எடுத்துக் கொண்டு, இரத்தம் அழுக்காகித் திரும்பி இதயத்தை நோக்கிச் செல்கிறது. இப்படிச் செல்களுக்குக் காற்றுப் பரிமாற்றத்தையும் உணவூட்டத்தையும் கொடுக்கின்ற பணியானது, தங்கு தடையின்றி தாராளமாகவும் ஏராளமாகவும் நடைமுறைப்படுத்தப்படுவதற்குத்தான் உடற்பயிற்சி உதவுகிறது. o மூச்சு இழுத்துக் கொண்டு உடலுறுப்புக்களை இயக்குகிறபோது, எந்த உறுப்பு அதிகமாக