பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 2:7 4. எடைப்பயிற்சியும் எடைத் துக்குதலும் (Weight Training and weight Listing) எடைப் பயிற்சியா? ‘'வேண்டாம் தம்பி தங்கைகனே! அவை விபரீதமான விளைவுகளை உண்டாக்கும். அது வேண்டாத வேலை வீணான முயற்சி. விலக்கத்தக்கப் பயிற்சி' என்று வாய் கிழியப் பேசி, வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கும் வாய் சவடால் ஆட்கள் நிறைய பேர்கள் உள்ள பூமி நம்முடையதுதான். எடைப் பயிற்சி என்றால் என்ன? என்று புரிந்து கொள்ளாமலேயே, ஏறுக்குமாறாக எகத்தாளமாகப் பேசி, எதையும் செய்ய விடாமல் குறுக்கே விழுகின்ற கேடுகெட்ட கிடாக்கள், கோயில் மாடுகள் அதிகம். அவர்கள் சரமாரியாகச் சாட்டுகின்ற குற்றச்சாட்டுக் களைப் படியுங்கள். 1. எடையைத் துக்கித் துக்கி நீங்கள் குள்ளமாகப் போய் விடுவீர்கள். உங்களால் உயரமாக வளர முடியாது. 2. உடம்பு தசைகள் தசைக் குன்றாகத் தெரியும்