பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3G உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் அ.த இரும்புக் கழி வளையாமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான குறிப்பாகும். எடைகளை இறுக்கமாகப் பிடித்திருக்க இருபுறமும் காலர்கள் வேண்டும். நிறுத்து வளையம் (Collar) என்றும் இதைச் சொல்வார்கள். இவ்வளவையும் சேர்த்து மொத்தமாக இதற்கு ஒரு பெயர் உண்டு. -تھے அதுதான் எடை ஏந்தி (Bar Bell) என்பதாகும். 2. sisool_# 35i" (S&ssir (Weights or iron Discs) நீண்ட இரும்புத் தண்டான எடை ஏந்தியின் இருபக்கத்திலும் எடைகளை சேர்க்கத்தான், எடைத் தட்டுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எடை ஏந்திக் கம்பிக்குள்ளாக எடைத் தட்டுக்கள் செல்லுமாறு நடுவிலே துவாரம் போடப்பட்டிருக்கும். ஒரு தட்டின் எடையானது ஒரு பவுண்டு முதல் 50 வண்டு வரை உண்டு. 2.5 முதல் 5, 10, 15, 20, 25 அமைப்புள்ள எடைத் தட்டுகள் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.