பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 9. ஒரு சுற்றுக்கும் மறு சுற்றுக்கும் இடையில், போதிய இடைவேளை நேரம் விட வேண்டும். அதாவது சற்று ஒய்வு நேரம் தர வேண்டும். 10. ஒரு குறிப்பிட்ட எடைகளை வைத்துக் கொண்டு, பயிற்சியை ஆரம்பித்தால், குறைந்தது 6 வாரத்திற்காவது அந்த எடைகளில்தான் செய்ய வேண்டும். வேண்டுமானால் ஒருமுறை ஒரளவு எடைகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதிக எடை கூடாது. அவசரப்படவே கூடாது. 11. ஒருநாள் விட்டு ஒருநாள் பயிற்சியைத் தொடர்வது நல்லது. ஒருநாள் ஒய்வு விடுகிறபோது உடல் தசைகள் செம்மையாகி வளர வாய்ப்புகள் அமைகின்றன. ஒரு நாளைக்குப் பயிற்சி என்றால் குறைந்தது ஒரு மணிநேர அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு 3 நாள் என்றாலும் உடல்நலம் இருப்பதைப் பொறுத்து தொடர்ந்து கொள்ளலாம். 12. வெறும் வயிற்றில்தான் பயிற்சிகள் செய்ய வேண்டும். வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு செய்வது, வேதனைகளை நாமே விலைக்கு வாங்குவது போலாகும். 13. மூச்சுப் பயிற்சி எப்பொழுது மூச்சிழுப்பது - எப்பொழுது மூச்சு விடுவது போன்ற முறைகளைக் கட்டாயம் அறிந்து கொண்டு அதன்படி செய்தால்தான் பயிற்சிகள் விரைவில் பயனளிக்கும். 14. உடலுக்கு அழகு வேண்டும் என்று உளமார விரும்பிய பிறகு, ஒழுக்க முறைகள் க.டா: வேண்டும்.