பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 マ டாக்டர் நவராஜ் செல்லையா கவனிக்கப்பட வேண்டும். எடைத் தட்டுள்ள பகுதியிலிருந்து உங்கள் கையால் ஒரு சாண் உள் அளவாக இருபுறமும் அளந்து கொண்டு.அந்த அளவில் எடை ஏந்தியைப் பிடித்துத் துக்கலாம். படத்தைப் பாருங்கள். தோள்களின் அளவு தூரம் இடைவெளி விட்டுப் பிடிக்கலாம். கால்கள் வைத்திருக்கும் இடத்திற்கு நேராக கைப்பிடிப்பு இருப்பதையும் கவனியுங்கள். உள்ளங்கைப் பகுதி மேற்புறத்திலிருந்து கீழ்ப் புறமாக வந்து எடை ஏந்திக் கம்பியைப் பற்றி யிருப்பதை போல் பிடிக்கவும். இதுதான் எடை ஏந்தியைத் துக்குவதற்கு முன்பாகப் பற்றிப் பிடித்திருக்கும் முறை. 3. குறிப்பு: இனி எல்லாப் பயிற்சிகளுக்கும் இந்தப் பிடி முறையையே பின்பற்றவும். பிடியின் துரம் மாறுகிறபோது அந்ததந்தப் பயிற்சியின் விளக்கப் பகுதியில் குறிப்பிட்டிருப்பதை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். 1. முழங்கால்கள் மடிந்து முன்புறம் வர கீழே குனிந்து, எடை ஏந்தியைப் பிடித்துத் துக்கி வந்து, நெஞ்சுக்கு முன்புறமாக வைக்கவும். 2. நன்றாக மூச்சிழுத்துக் கெ:ண்டு, எடை ஏந்தியைத் தலைக்கு மேற்புறமாகத் துக்கிச் சென்று நிறததவும். பிறகு நெஞ்சுக்கு முன்புறமாகக் கொண்டு வந்து மூச்சை விட்டுவிட்டு, பிறகு மூச்சிழுத்து எடையை