பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பயன்களைப் பெற்றுப் பிரகாசிக்க முடியும். எடைப் பயிற்சிகள் என்றதும், எடைகளைத் தூக்கிச் சுமந்து இன்னல் படவேண்டுமா என்று அஞ்ச வேண்டாம். வெறுங்கை ப் பயிற்சிகளில் பயன்வர நாட்களாகும். கொஞ்சம் எடைகளைக் கொண்டு பயிற்சி செய்தால், விரைவில் பயன் கிடைக்கும். பலன் கிடைக்கும். மிக எளிமையான முறையில் வலிமையும் பொலிவும் தருகிற பயிற்சிகளை படத்துடன் தந்திருக்கிறேன். சந்தோஷமாக பயிற்சியைத் தொடங்குங்கள். உங்களைச் சுற்றியுள்ள சங்கடங்களும், சகிக்க முடியாமல் சஞ்சரிக்கும் சபலங்களும் சலனங்களும், உங்களை விட்டு ஒடியே விடும். மீண்டும் வராது. வரவே வராது. ஆமாம்! உடலுக்கு அழகும் பெர்லிவும் உண்டாகி வர வர உள்ளத்தில் உடல்காக்கும் ஆர்வம் அதிகமாகும். அதனால் ஒழுங்கான பழக்க வழக்கங்கள் அமையும். மற்றவர்களை உலகில் சிறந்த மனிதராக, மதிக்கச் செய்துவிடும் சிறப் பால் உண்மையாகவே உடற் பயிற்சியை நம்பிச் செய்பவர்கள் சிறப்புப் பெற்று விடுகின்றார்கள். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பதில் சிறப்பில்லை. எத்தனை ஆண்டுகள் செழிப்பாக வாழ்ந்தோம். சிறப்பாக வாழ்ந்தோம் என்று வாழ்வதுதான் மனிதர்க்கு அழகு. - இந்த மாபெரும் பணிக்காக இதுவரை நான் 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். என் இனிய இலட்சிய நூல்களை ஆதரித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த நூலை அழகுற அச்சிட்டுத் தந்திருக்கின்ற திரு. . ஆர். ஆடம் சாக்ரட்டீஸ், திரு. ஆ. கோமதி நாயகம் அவர்களுக்கு என் அன்பு நன்றியும் பாராட்டும். லில்லி பவனம் அன்புடன் சென்னை - 17 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.