பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(34 H உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் 2. பிறகு மெதுவாக மூச்சை வெளிப்படுத்தியவாறே எடை ஏந்தியைக் கீழ்ப்புறமாக இறக்கிக் கொண்டு வந்து, தொடைக்கருகில் வைத்திருக்கவும். 10 தடவை. 3 சுற்றுகள், சுற்றுகளுக்கிடையே ஒரு நிமிடம் ஒய்வு தரவும். - பயிற்சியின் போது எடையை மார்புக்கு நேராகத் தூக்கிச் செல்லும் சமயத்தில், கால்களை நிலைமாறி நகர்த்தக்கூடாது. உடலை வளைக்காமல் நிமிர்ந்து நிற்கவும். a " தூக்கும் சக்தி கைகளில் இருந்துதான் கிடைக்க வேண்டுமே தவிர, வயிறு மற்றும் கால் பகுதிகளில் இருந்து கிடைக்கும்படி முயற்சிக்கக்கூடாது. பயிற்சி 15 துடுப்புப் பயிற்சி (Rowing) - நோக்கம்: தோள், (မှဲ့+ ج புஜங்கள், முழங்கைப் & பகுதித் தசைகள் மற்றும் அடி வயிற்றுத் தசைகள் வலிமை பெற. ஆரம்ப நிலை படகு செலுத்துகின்றபோது துடுப்பு போடுவது போல இந்தப் பயிற்சி அமைந் திருப்பதால், இந்தப் ப்ெயர் வந்திருக்கிறது.