பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டைஃ. a' 氢_象 இத் o உடலுக்கு அரிரு தரும் டைம் ஆன்த்சிகன் 68 9. பெஞ்சுப் பயிற்சிகள் (Bench Exercises) மேலுயர்த்தும் பயிற்சிகன் (Be ch Press) நோக்கம்: மார்புத் தசைப் பகுதிகள் முதுகுத் தசைப் பகுதிகள் நன்கு வலிமை பெற உதவுகிறது. ஆரம்ப நிலை: பயிற்சிப் பலகையில் இடுப்புப் பின் புறப் பகுதியும் முதுகுப் பகுதியும் படுவது போல மல்லாந்து படுத்து, பாதங்கள் இரண்டும் தரையில் சரியாகப் பதிந்திருப்பதுபோல வைத்து முதலில் படுக்கவும். உதவியாளர் எடுத்துத் தருகிற எடை ஏந்தியைப் படத்தில் உள்ளது போல,மார்புக்கு மேலாக இரண்டு கைகளும் எச்சரிக்கையுடன் பிடித்திருக்க வேண்டும். 1.நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு எடை ஏந்தியை மார்புக்கு நேராக, எவ்வளவு தூரம் உயர்த்த முடியுமோ அந்த உயரத்துக்கு உயர்த்த வேண்டும்.