பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையய 73 10. எடைக் குண்டு பயிற்சிகள் எடைக் குண்டுகள் என்பது இரண்டு பக்கமும் இரும்புக் குண்டுபோல வடிவத்தில் இடையில் கைப் பிடிப்பதற்காக' நடுவில் சிறு இடமும் தந்து தயாரிக்கப்பட்டிருக்கும். ஒரு எடைக் குண்டின் எடை 5 பவுண்டிலிருந்து 25 பவுண்டு வரை இருக்கும் ஒரு சில இடங்களில் இரும்புத் துண்டில் இருபுறமும் எடைத் தட்டுகளை கோர்த்துக் கொள்வது போலவும் அமைக்கப்பட்டிருக்கும். அது எப்படி இருக்கும் என்று படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். எடைக் குண்டைப் பற்றிப் பிடித்திருக்கும் முறை இது. உடம்பின் பக்கவாட்டில் இருபுறமும் கைகளைத் _ தெலங்கவிட்டுக்கொண்டிருக்கும் நிலை இது.