பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 91 $3. முக்கிய குறிப்புகள் அன்புக்குரியவர்களே, - உங்களுக்கு உடலழகு தரக்கூடிய முறைகளையும் உத்திகளையும் இதுவரை படித்துத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உடற்பயிற்சியைப் பற்றி மற்றவர்கள் மூலமாக புத்தகங்கள் மூலமாக நிறையத் தெரிந்து வைத்திருப் பீர்கள். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தெரிந்து கொண்டால், பயிற்சி, விரைவாகப் பலனளிக்கும் என்பதால், இந்தப் பகுதியில் சில விளக்கங்களைத் தந்திருக்கிறோம். 1. ஏற்கனவே இருக்கும் ஆர்வம் இப்போது எற்பட்டிருக்கும் உற்சாகம். பயிற்சிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட உத்வேகம் எல்லாம் உங்களை உடனே எடைப் பயிற்சி செய்ய இருந்த ஏக்கத்தைத் தீர்த்து வைக்க அழைக்கும். எல்லா:ே நியாயமானவைதான். முதன்முதலாக பயிற்சிகளைச் செய்கிறபோது, சந்தோஷமாக இருக்கும். முடிந்த நாள் அன்று இரவு படுத்துறங்கும்போது உடல் பூராவும் வலியும் வேதனையுமாக இருக்கும். காலையில் எழுந்திருப்பது கஷ்டமாக இருக்கும்.