பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் எதற்கிந்தப் பயிற்சி என்று நினைக்கத் தோன்றும். இதுபோல ஒரு வேதனை அவசியமா என்று எண்ணத் தூண்டும் யாராவது வந்து எதற்கு இந்தக் கஷ்டம் என்று சொன்னால் போதும். மனதும் மாறிவிடும். தொடராமல் பயிற்சியைத் தூக்கி எறியவும் மனம் துணியும். H உங்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் பயிற்சி செய்கிறபோது, இழுக்கிற அதிக சுவாசம், செய்கிற அதிகமான உடல் இயக்கம், உழைப்பு. இதன் காரணமாக, உங்கள் உடலிலுள்ள பழைய திசுக்கள் உடைந்து போகின்றன. அவை இரத்த ஓட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. நீங்கள் பயிற்சியை நிறுத்தி விடுகிற போது, ஆங்காங்கே அந்த உடைந்த திசுக்க இருந்த பகுதியில் வலியும் வேதனையும் இருக்கத்தன் இருக்கும். உடைந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்கள் உருவாகிட மூன்று நாட்கள் ஆகும். அதுவரை உடலில் வலியும் வேதனையும் இருந்து கொண்டே இருக்கும். மூன்று நாட்கள் ஆன பிறகு, உங்களுக்கு வந்த வலிகள் பின் வாங்கிவிடும். புதிய தெம்பு வந்தது போல புத்துணர்வும் ஏற்படும். நீங்கள் அந்த மூன்று நாட்களுக்குத் தாக்குப் பிடித்து விட்டால், பிறகு உங்கள் என்னம் ஈடேறும். கனவுகள் கைக்குள் அடங்கும்.