பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா to sy பயிற்சியில் ஈடுபட்டு பாதியில் கைவிடுபவர்கள் எல்லோரும் இந்த மூன்று நாள் வலியால்தான் விடுகிறார்கள். விலகி ஓடுகிறார்கள். ஆகவே புதிதாக ஆரம்பிக்கின்ற நீங்கள். பயிற்சியின் எண்ணிக்கையை, எடையின் அளவை அதிகரித்து விடாமல், சிறிது சிறிதாக உயர்த்திக் கொண்டே போக வேண்டும். அதுதான் அறிவான 2. அரச மரத்தடியைச் சுற்றியவுடன் அடிவயிற்றைத் தடவிப் பார்ப்பது என்ற ஒரு பழமொழி உண்டு. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். பயிற்சி செய்த பத்து நாட்களுக்குள் தசைகள் எங்கே? வடிவம் எங்கே? கவர்ச்சி இல்லையே? என்ற கேள்விகள் எழும். நமக்கு உடலழகு வராதா என்ற சந்தேகமும் வரும். என்னப்பா உடம்பு தேறி வில்லையே என்று கோள் மூட்டி விட்டு கேலி செய்கிற நண்பர்கள் கூட்டமும் கிண்டலடித்துக் கிண்டிவிடும். உடல் என்பது மண் கவர் அல்ல. மண்னைப் பிசைந்து அப்பி சரி செய்து சுவராக்கிவிட. உடல் உறுப்புகள் எல்லாம் செல்களின் அமைப்பால், சுவாசத்தால், இரத்த ஓட்டத்தால், எலும்புகளாலும் தசைகளாலும் உருவாகியுள்ளன. அவைகளின் வளர்ச்சி வேகத்தை யாரும் விரும்பும்போது விரைவு படுத்தி விட முடியாது.