பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

1

உலகத்தின் அற்புதம் உடல் தான்



அருமையான ஆரம்பம்

மனிதப் பிறவியானது மாபெரும் வரம் பெற்று வந்த பிறவியாகும். வேறு எந்த ஜீவராசிகளும் பெறாத பேறுகள் மனிதர்க்குண்டு.

அழகான உடல் அமைப்பு; அறிவுத் தெளிவு; மொழிச் செறிவு; வாழ்க்கைப் பொலிவு. மிருகங்களுக்கு இல்லாத மேனி மெருகேற்றம். அதுதான் மனிதப் பிறவியின் உயிரூட்டம்.

வந்து பிறந்த விதம் நமக்குத் தெரியாது. இங்கிருந்து எப்பொழுது போகும் தினம் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இருக்கும் வரை இன்பமாக வாழத் தெரியாது என்று யாராவது கூறினால், அறிவுத் தெளிவு உள்ளவர்களாக அவர்களை நாம் கருதமுடியாது.

அறிவின் ஆரம்பமே ஆனந்தமாக வாழ்ந்து கொள்ளத் தான். பாதைகள் பயணத்திற்காக; உபாதைக்குள்ளாக்க அல்ல. நம் அறிவு - வழி நடத்தத் தான். வழி மாற்றி அவதிப்படுத்த அல்ல.