பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

09

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




நமது நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம். ஆதாரம் எது ? நமது உடல் தானே!

நமது உடலைப் பற்றி நாம் அக்கறை கொள்ளாமல் வாழ்வது அறிவுடைமை என்று பலர் நினைக்கிறார்களே! அந்த நினைவினை தான் வாழாமல், அடுத்தவர்கள் மீதும் சுமத்துகின்றார்களே! ஏன்?

முன் யோசனையற்ற மூடர்கள் என்று நாம் அவர்களைக் கூறலாமா?

தெரிந்தும் புரியாத மூடத்தனம் அது.
வராமல் தடுத்து வாழ்வது மேதைத்தனம்.
வந்த பின் தடுத்துக் கொள்வது பேதைத்தனம்.
வந்தும் தீர்த்திட முயலாது வாடுவது மூடத்தனம்.

நாம் கூறிய மூன்றாவது ‘தனத்தில் முக்காடிட்டுக் கொண்டு வாழ்பவரை அப்படித்தான் உங்களுக்கும் அழைக்கத் தோன்றுகின்றதல்லவா!

மூடத்தனம் இன்றி மேதைத்தனமாக வாழ்வதற்குப் பெரிய பொருள் வசதி எதுவும் நமக்குத் தேவையில்லை. அவசியமும் இல்லை.

கொஞ்சம் முன்கூட்டியே திட்டமிட்டால் போதும்.

நல்ல வாழ்க்கைக்கு உடல் தான் ஆதாரம், சிறந்த அடித்தளம் என்ற உண்மையை உணரத் தலைப்பட்டுவிட்டாலே, நமக்குள் மேதைத்தனம் நர்த்தனமாடத் தொடங்கிவிடும்.