பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




நினைப்பதையெல்லாம் செயல்களில் கொண்டுவர திட்டங்கள். இரவு பகல் பாராது உடலை ஆட்டுவிக்கும் ‘இராவணச் செயல்கள்.’ எல்லாம் தனக்கு வேண்டும் என்கிற ‘இட்லர் வெறிகள்.’ ‘முசொலினி முரட்டுத் தனங்கள்.’

இவைகளை வாங்கி மனம் தாங்கும். அது மாயாசக்தி தானே! இறக்கையின்றி பறக்கும் வாலிபக் குருவி அது. எந்நேரமும் புது உலகில் ஜீவிக்கும் பிடிபடாஜீவி.

அதற்கு ஈடுகொடுத்து கனவுகளை நிறைவேற்றக் கடுமையாக உழைப்பது எது? உடல் தானே!

உடலை எல்லோரும் ஒரு வேலைக்காரராகத்தான் நடத்தினார்களே ஒழிய, மதிப்பிற்குரிய முக்கியஸ்தர் என்று யாருமே நினைக்கவில்லை.

உடலைப் பற்றிய முக்கியத்துவம், எப்பொழுது உள்ளத்திலிருந்து இறங்க ஆரம்பித்ததோ, அப்பொழுதே உடலுக்கிருந்த வலிமையும் பெருமையும் இறங்க ஆரம்பித்தது.

அந்தக் கிறக்கத்தின் ஆக்ரமிப்பு தான், இப்பொழுது உலகத்தை உலுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது. பெயர் தெரியாத நோய்கள் புற்றீசல் போல் கிளம்பிவிட்டன. பெருந்துன்பப் புகை மண்டலம், மனித சமுதாயத்தை ஒளி மங்கச் செய்துவிட்டது.

அதிலிருந்து மனித குலம் விடுபட வேண்டுமானால், வெளிவர வேண்டுமானால், உடலை மறக்கும் மடத்தனத்தி