பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

12


லிருந்து, நாம் திருந்தியாக வேண்டும். மாபெரும் தவறைத் திருத்தியாக வேண்டும்.

வாய்ப்பிருக்கும் வரை விருந்தில் மகிழலாம். நோய் வந்த பிறகு மருந்தில் உலவலாம் என்ற பேதைத்தனக் கொள்கையை நாம் புறந்தள்ளியே ஆக வேண்டும்.

‘ஆண்மையுள்ள மனித இனம், ஆற்றல் மிகுந்த இனம். அனைத்துலக ஜீவராசிகளையும் ஆம்டுவிக்கும் இனம்’ என்ற பெருமை, ஆறறிவு ஜீவிகளிடமிருந்து அகலத் தொடங்கிய பிறகே, மனிதர்களுள் மாண்பாளர்களாக விளங்கிய சிலரது மனங்கள் விழித்துக் கொண்டன. சிலிர்த்துக் கொண்டன.

உடலை மதிப்போம் என்றனர் சிலர்.

உடலை வளர்ப்போம் என்றனர் சிலர்.

உடலைத் துதிப்போம் என்ற அளவுக்கும் உயர்ந்து எழுந்தனர் சிலர்.

உடலில் சிறப்போம். உடலுள் சிறப்போம். உடலால் சிறப்போம் என்று உலகுக்கு உணர்த்த விழைந்தனர்.

இத்தகைய விழிப்புணர்வின் வெளிச்சம் தான். மனிதர்களது மகிமையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த ஒளியில் உலாவரும் நிலையில் தான் இன்று நாம் இந்த நூலிடையே நுழைந்திருக்கிறோம். இந்த இன்ப