பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

14



கவனிக்காத பொழுதே கணக்கற்ற இன்பங்களும், ஏற்றங்களும் கிடைக்கிறதே! இன்னும் நுண்மையுடன் கவனித்தால், காப்பாற்றினால், என்னென்ன சுகங்கள் கிடைக்கும்? ஏராளமாக அல்லவா பொழியும்! காணக் கிடைக்காத காமதேனு அல்லவா நமது உடல்!

இயற்கையாகவே நமக்குள் இருக்கின்ற சக்தி வெளிப்பாட்டைக் கண்டுபிடித்து, வல்லுநர்கள் மூன்று வகையாக உடல் சக்தியைப் பிரித்துக் காட்டுகின்றார்கள். சக்தியை நாம் இனிமேல் வலிமை என்றே கூறலாம்.

1. இயற்கையான வலிமை : இந்தப் பிரிவில் அடங்கிய மனிதப்பிறவிகள், திங்கள் தேகத்தில் இயற்கையாக ஊறுகின்ற வலிமையை வைத்துக் கொண்டு வாழ்கின்றவர் களாவார்கள்.

இவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும். பயிற்சிகள் செய்து பலப்படுத்த வேண்டும். வலிமைப் படுத்திட வேண்டும் என்ற முயற்சி சிறிதும் இல்லாமல் வாழ்பவர்கள்.

தங்கள் அன்றாட வாழ்க்கைக்குரிய கடமைகளில் மட்டுமே உழன்று சுழல்பவர்கள். தூங்குவது, காலைக் கடன்களை முடிப்பது, குளிப்பது, உண்பது, தங்கள் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்க்கும் பணிகளையும், வருமானத்திற்குரிய வேலைகளையும் செய்து வாழ்பவர்கள்.

‘எங்கள் வேலைகளை நாங்கள் செய்கிறோம், நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். பயிற்சி வேறு தனியாக எதற்கு’ என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும் பிரகிருதிகள் இவர்கள்.