பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

16



2. தசை வலிமையாளர்கள் : தங்கள் தேகம் தசைத் திரட்சியால் செழுமையான தோற்றம் பெறவேண்டும் என்று இனியதோர் இலட்சியத்துடன் உடற்பயிற்சிகளைச் செய்கின்றவர்கள்.

இயற்கையான உடல் வலிமையுடன். இன்னும் கொஞ்சம் பயிற்சி முறைகளை உடலைப் பக்குவப்படுத்தி, பராமரித்துக் கொண்டு வாழும் பண்பாளர்கள் இவர்கள்.

3. வல்லமை மிகுந்த வலிமையாளர்கள் : தசைகள் மட்டும் திரட்சியாகப் போதும் என்றும், குறிப்பிட்ட கொள்கைகளுக் குள்ளே குதிரை ஒட்டிக் கொண்டிருப்பது போதாது. எல்லா அவயவங்களுக்கும் பயிற்சிகள் தந்து, முழு தேகத்தையும் முனைப்புடன் காப்பவர்கள் முழுமூச்சாக உழைப்பவர்கள்.

தசைகளைப் போலவே, இருதயம், நுரையீரல், நரம்புகள் போன்ற முக்கிய உறுப்புகளும் உடலில் இருக்கின்றனவே! அவைகளுக்கும் உகந்த பயிற்சிகள் தந்தால், தளர்ச்சியைப் போக்கலாம். தசைகளில் திரட்சியையும், தேர்ச்சியையும் , அழகையும் சேர்க்கலாம். அத்துடன், சோர்வினைப் போக்கி, சுறுசுறுப்பையும் நல்குகின்ற முழு வல்லமையையும் பெறலாம்.

இத்தகைய இனிய தேகம் உடையவர்களே, வாழ்வாங்கு வாழ்கின்றார்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றார்கள்.