பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுபாடும்

20




உண்பது ஒரு அத்தியாவசியமானதாக உள்ளது.

அப்படியென்றால், உணவு எப்படி உதவுகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

உணவு உட்கொண்ட முறை

ஒரு நாளைக்கு எத்தனை முறை உண்ணலாம், என்று உணர்ச்சி வசப்பட்டுக் கேட்பவர்களும் உண்டு.

அதற்குப் பதில் அளிப்பது போல, அன்றே கூறிப் போயிருக்கின்றார்கள் நமது முன்னோர்கள்.

“ஒருவேளை உண்பவன் யோகி.
இரு வேளை உண்பவன் போகி.
மூன்று வேளை உண்பவன் ரோகி.”

இயமம் நியமத்தில் ஈடுபட்டிருக்கும் துறவிகள் ஒரு வேளை மட்டும் உண்டு, இறைவனைப் பற்றிய தியானத்தில் இருப்பதால், அவர்களுக்குத் தேவையாயிருந்தது ஆன்மபலம். அதனாலேயே பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற கொள்கையுடன் வாழ்ந்தார்கள். இவர்களுக்கு உயிர் வாழ, கொஞ்சம் உணவு தேவைப்பட்டது. அவ்வளவு தான்.

இரண்டு வேளை உண்பவன் போகி. அதாவது இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் உழைப்புக்கு மட்டுமின்றி, உடலுறவுக்கும் ஈடு கொடுத்தாக வேண்டும் என்பதற்காக, இரண்டு வேளை உண்டால் போதும் என்று ஏற்படுத்திய கொள்கை இது.