பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




மூன்று வேளை உண்பவன் கதிரோகி, ரோகத்திற்கு அதாவது நோய்க்கு ஆளாகுபவன் என்பதாக இதன் பொருள்.

மூன்று வேளை உண்டாலே நோய் வரும் என்கிற பொழுது, காலையில் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை எதையாவது தின்றுகொண்டே இருக்கின்றார்களே இந்தக் காலத்தில். அது எப்படி! அதனால் தான் பெயர் இல்லா நோய்களெல்லாம் இன்று மக்களை பேயாய் ஆட்டிக் கொண்டு, பிரபலமாக விளங்குகின்றனவோ!

ஆகவே தான், உணவு முறையிலும், உண்ணும் முறையிலும் நமது முன்னோர்கள் ஒரு வரன் முறையைப் பின்பற்றி வந்தனர் போலும்.

ஒரு மேல்நாட்டுக்காரன், தமிழர் வீட்டு சமையலறைக்குள் நுழைந்து பார்த்த பொழுது, அங்கு வைக்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், சோம்பு போன்ற பொருட்களைப் பார்த்து விட்டு, இதென்ன! எல்லாப் பண்டங்களும் மருந்து விவகாரங்களாகவே இருக்கின்றனவே என்று வியந்து கூறினானாம்;

ஏனென்றால், உணவு பெரும்பாலும் விருந்தாகவும், சமயத்தில் மருந்தாகவும் உதவ வேண்டுமேயன்றி, உபத்திரவம் தரக்கூடாது என்கிற வகையில், மருந்தாகவும் இருந்தாக வேண்டும் என்ற உணர்வுடன், உணவு முறையை நமது முன்னோர்கள் அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.

உட்கொள்ளுகின்ற உணவு, வகைகளாலே ஒருவர் குணாதிசயங்களும், கொள்கைகளும், நடைமுறைகளும்