பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

22


மாறும் என்ற ஒரு கருத்தையும் நாம் எண்ணிப் பார்ப்பது நல்லதாகும்.

உணவும் உபயோகமும்

நாம் உண்ணும் உணவு. நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்வோம்.

1. உடலுக்கு சக்தி அளிக்கிறது.
2. உடலை உருவாக்கவும் செல்களையும் புதுப்பிக்கவும் உதவுகிறது.
3. உள்ளுறுப்புக்களை இயல்பாக இயக்கி ஒழுங்குபடுத்துகிறது. இம்மூன்று செயல்களையும் சற்று விரிவாகவே காண்போம்.

சக்தியும் உடலும்

உடலுக்குச் சக்தியை அளிக்கின்ற உபகரணமாகவே உணவு உதவுகிறது.

அதாவது ஒடுகின்ற நீராவி எஞ்சின் அல்லது கார் முதலியவற்றை உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம். நீராவி எஞ்சினுக்கு நீரும் நிலக்கரியும் உல்லாசமாக ஒடுகின்ற காருக்குப் பெட்ரோலும் உணவு போலத் தேவைப்படுகிறது.

இவையில்லாவிட்டால், அந்த இரண்டும் இடம் விட்டு நகராது. அப்படிப்பட்ட தன்மையில் தான், உடலை இயக்கும் முக்கிய சூத்ரதாரியாக உணவு நமக்கு உதவுகிறது.