பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

26


ஒரு சீராக சாப்பிடுதல் நல்லது என்று வல்லுநர்கள் அறிவிக்கின்றார்கள்.

இவ்வாறு உடல் இயக்க சக்தி செலவானது ஆண்களை விட பெண்களுக்குக் குறைவாகவே உள்ளது. இந்தப் பகுதியில் நாம் குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம், இது தான்.

உணவு இரசாயன மாற்றம் பெற்று உருவாக்குகிற சக்தி, உடலுக்கு வெப்பம், இயக்கம், மின்சார இயக்கம் போன்ற நரம்பணுக்கள் பணிபோன்ற சக்தியை அளிக்கிறது. இந்த இரசாயன மாற்றத்தால் எழும் அடிப்படை சக்தியை உடல் வெப்பத்திற்காகவும் வேலைக்காகவும் மாற்றிக் கொள்ளும் அற்புதப் பணியைத்தான் உடல் ஒப்பற்ற முறையில் நொடிக்கு நொடி செய்து கொள்கிறது என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.