பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

30


3. புரோட்டீன் (Protein)

வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமை யாத சக்தியாகும் இது. மிருகங்கள் மூலமாகக் கிடைக்கின்ற உணவு வகைகளில் நிறைய புரோட்டீன் சத்து இருக்கிறது.

மிருகங்களிலிருந்து கிடைக்கும் கறி, பால் போன்ற வற்றில் அதிக ஆற்றலும், தாவரங்களிலிருந்து கிடைக்கும் காய், கீரை போன்றவற்றில் குறைந்த ஆற்றலும் உள்ள : புரோட்டீன்கள் கிடைப்பதால்தான், சைவ உணவுக் காரர்களுக்கு சரியான புரோட்டீன் சக்திகள் அதிகமாகக் கிடைக்காமற் போகிறது.

புரோட்டீன் சக்தியானது, ஜீரண மாகும் போது அமினோ (Amino Acid) ஆசிடாக மாறுகிறது. உடனே இரத்த ஓட்டத்தில் கலந்து, பிறகு மீண்டும் தேக புரோட்டீன் சக்தியாக மாறுகிறது. இது உடலுக்கு நிறைந்த சக்தி தரும் ) உணவு வகையாக விளங்குகிறது.

4. வைட்டமின் (Vitamin)

உடலுறுப்புக்களின் இயற்கையான, இதமான அதிசயமான ஆற்றல் இயக்கங்களுக்கு உதவுவது தான் வைட்டமின் ஆகும்.

Vita எனும் சொல்லுக்கு Life என்பது பொருளாகும். அதாவது வாழ்வுக்குச் சிறந்த உறுதுணையாகின்றன என்பதால் தான் இந்தப் பெயரை 1912 ஆண்டு, விஞ்ஞானிகள் சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர்.