பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




வைட்டமின்களில் பல வகைகள் இருக்கின்றன. அவைகள் தங்கள் திறமைக்கேற்ப பற்பலப் பணிகளை ஆற்றுகின்றன.

உடலின் உறுப்புகள் வளர்ச்சிக்காக, முறைப்படுத்தி, நெறிமுறையான கட்டுமானப் பணிகளை ஆற்றும் ஒரு வகைப்பணி.

இயங்கும் உறுப்புகளுக்கு வழவழப்புத் தன்மையூட்டும் (எண்ணெய்) பசைத்தன்மையை உண்டாக்கும் ஒரு வகைப்பணி.

புதிதாகப் பிறப்பிக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் ஆன பெரும் பணிகளையும் வைட்டமின்கள் செய்கின்றன.

நாம் உண்ணுகின்ற உணவு வகைகளில் சிறு அளவு நுண்ணிய முறையில் காணப்படும் உயிர்காக்கும் வைட்டமின்களை, A, B, C, D, E, K என்று பிரித்துக் காட்டியிருக்கின்றார்கள். அவற்றின் தன்மைகளையும் அவை குறைந்தால் ஏற்படும் இன்னல்களையும் தொடர்ந்து காண்போம்.

வைட்டமின் A : உடல் வளர்ச்சிக்கு, பற்கள் அமைப்புக்கு, செழுமையான கண்பார்வைக்கு, இரவில் தெளிவானக் காட்சிக்கு, நலம் சார்ந்த தோல் வளத்திற்கு, இது உதவுகிறது.

வைட்டமின் A சரியான அளவுக்குக் கிடைக்காவிடில், கெராட்டோமலேசியா (Keratomalasia) என்ற கண்நோய்