பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

32


உண்டாகிறது. இதுவே குருட்டுத் தன்மை அடைய விரைவில் வழியுண்டாக்கி விடுகிறது.

குழந்தைகளை இது அதிகம் பாதிக்கிறது. சாதாரண நலம் உள்ளவர்களுக்குக் கூட, பகலில் தெரிகின்ற கண்பார்வை, மாலை நேரமானதும் மங்கிப் போய், இரவில் எதுவும் தெரியாத குருட்டுப் பண்பினைக் கொண்டு வந்து விடுகிறது.

இவ்வைட்டமின் குறையக் குறைய, தோலின் மினு மினுப்பும், பளபளப்பும், மென்மைத் தன்மையும் மாறிப் போய், தோல் மேற்பகுதியில் சொரசொரப்பும், காய்ந்த தரையானது பிளவுபட்டுக் காண்பது போல கரைகட்டியும் காணப்படும். இது தவளையின் முதுகுப் பகுதியினைப் போல் தோற்றமளிப்பதால், தவளைத்தோல் (Toad Skin) என்று கூறப்படும் அளவுக்குத் தோலை மாற்றி விடுகிறது.

அத்துடன் நில்லாமல், உடலில் வளர்ச்சி குறைவு ஏற்படுகிறது. வலிமையற்ற பற்கள். பிடிப்பிழந்திடும் ஈறுப்பகுதிகள், போன்ற தன்மைகளும் பெருகி, அழியும் சூழ்நிலையும் உண்டாகிறது. A கிடைக்கும் உணவு வகைகள்; பசுமையான காய்கறிகள், வெண்ணெய், முட்டை, பால், மீன், காரட்.

வைட்டமின் B : இந்த உயிர் சக்தியை இன்னும் நுண்மையாக ஆராய்ந்து, B, B1, B2 என்று பிரித்துக் காட்டியிருக்கின்றார்கள் அறிவியல் வல்லுநர்கள்.