பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




இந்த வைட்டமின், நாம் உண்ணும் கார்போ ஹைடிரேட் உணவுச் சக்திகளைக் கரைத்து, உடலுக்குள் கலந்துவிட உதவுகிறது. அத்துடன் நரம்புகளை மிகுந்த உணர்வுடன் இயங்கச் செய்யவும், உடல் வளர்ச்சியில் எழுச்சி தரவும் உதவி செய்கிறது. கண்கள், நாக்கு, குடற்பகுதிகள் வளமாக இருக்கவும் உதவுகிறது. B சத்துக் குறையக் குறைய, பெரிபெரி என்ற நோய் உண்டாகிறது. உடல் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுகிறது. நரம்புகள் செயலில் குறைபாடுகள் நேர்கிறது. நரம்புத் தளர்ச்சி நோய் உடல் களைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

அத்துடன் வாய்ப்புண், தோல் வியாதிகள், இரத்தச் சிவப்பாகத் தோன்றும் கண்கள். இரத்த சோகை, சில சமயங்களில் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு, மனஉளைச்சல் போன்றவையும் ஏற்படுகின்றன.

இவை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள B, B1, B2 வைட்டமின் உள்ள உணவு வகைகளை அன்றாட உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லா வகை தானியங்கள், மாமிசம், ஈரல், கொட்டை வகைகள் (Nuts). முட்டை மீன், உருளைக்கிழங்கு, பால், மாட்டுக்கறி, தக்காளி, போன்றவற்றில் நிறையவே கிடைக்கின்றன. விரும்பியவர்கள் விரும்பியவைகளை உண்டு, தேகநலம் பெற்றுக்கொள்ள வேண்டியக அவசியமாகும்