பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

34



வைட்டமின் C : இந்த நூற்றாண்டில் தான் வைட்டமின் C இருப்பதாகக் கண்டறிந்து பெயர் தந்திருக்கின்றார்கள். அதுவும் நெல்லிக்கனியில் தான் நிறைய இருக்கிறது என்றும் கண்டு பிடித்துக் கூறினார்கள்.

ஆனால் இந்த நெல்லிக்கனியின் மகத்துவம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தெரிந்திருக்கிறது. மகா அசோகர் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட அசோகர் சக்ரவர்த்தி, ஒரு கூடை நெல்லிக்கனியை இலங்கை அரசனுக்குப் பரிசாக அனுப்பியதாக வரலாறு கூறுகின்றது.

நெல்லிக்கனி உடலுக்கு நன்மை பயக்கும் என்று, அக்காலத்திலேயே அறிந்திருக்கிறார்கள். இக்காலத்தில் அதற்கு ஒரு பெயரிட்டு, வைட்டமின் C என்று அழைக்கிறார்கள் அவ்வளவு தான்.

இந்த C வைட்டமின் இரத்தம் உருவாவதற்கு முக்கியமாக உதவுகிறது. அடிப்படை செல்கள் ஆற்றலுடன் செயல்பட செய்கிறது. உடைந்து போன திசுக்களைப் பழுது பார்த்து செப்பனிடவும், பற்கள், ஈறுகள், எலும்புகள், இரத்தக் குழாய்கள் உறுதி பெற்று உழைக்கவும் உதவுகிறது.

C வைட்டமின் குறையும் பொழுது, ஸ்கர்வி என்ற நோய் ஏற்பட, அது பற்களையும் ஈறுகளையும் பாழ்படுத்தி விடுகிறது. மூட்டுகளில் வீக்கமும் வலியும் உண்டாக்கி வேதனைப் படுத்துகிறது. உடல் முழுவதும் வலியையும் நீங்கி விடுகிறது.இதனால் பற்களில் இரத்தம்