பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கசிந்திட, ஈறுகள் வலிதர, காயங்களை ஆற்றுகின்ற ஆற்றலையும் உடல் இழக்கச் செய்து விடுகிறது.

C வைட்டமின் தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், பச்சை காய்கறிகள், கீரைகள், நெல்லிக்கனி, போன்றவற்றில் மிகுதியாகக் கிடைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் நிறையக் கிடைத்தாலும், இந்த இரண்டு ஆரஞ்சுப் பழம் ஒரு நெல்லிக்கனிக்கு ஈடாகாது என்றும் கூறுகின்றார்கள். பொதுவாக உடல் காக்கும் பூரண சக்தியாக C உதவுகிறது.

வைட்டமின் D : எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை தரும் வண்ணம் இது உதவுகிறது.

இந்த சக்தி உடலில் குறையுமானால், குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ரிக்கட்ஸ் (Rickets) என்ற வியாதியை விருத்தி செய்து விடுகிறது.

வயது வந்தவர்களுக்குக் குறிப்பாக பெண்களுக்கு ஒஸ்டியோமலேசியா எனும் நோயை உண்டு பண்ணுகிறது. இந்த நோயானது எலும்புகளை மென்மைப்படுத்தி, வளையும் தன்மையுடையதாக்கி விடுகிறது.

குறிப்பாக, கர்ப்பமுள்ள பெண்கள் இந்த நோய்க்கு ஆளானால், கூன் முதுகிட்டு நடக்கும் நிலைக்கு ஆளா அதுடன், மீண்டும் குழந்தை பேற்றுக்குத் தகுதியற்றவராகவும் ஆகிடும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

எலும்பை வலுப்படுத்தும் ஆற்றல் உள்ள D வைட்டமின் பால் மற்றும் வெண்ணெய்