பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

38




ஒரு மனிதனின் மொத்த உடல் எடையில் 65 சதவீதம் தண்ணீர் தான் ஆட்கொண்டிருக்கிறது. உடலில் உள்ள திசுக்களில் 90 சதவீதம் தண்ணீர் தான் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மனிதன் தனது தண்ணீர் எடையில் 10 சதவீதம் இழந்து போனால். அவன் இறந் போவான்.

தண்ணீர் உடலுக்குள் என்னென்ன பணிகளை மேற்கொண்டு நமக்கு உதவுகிறது என்பதையும் நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

உணவைச் சீரணம் செய்தல், (Digestion) உண்ட உணவுப் பொருட்களை உடலில் ஏற்றுக் கொள்ளச் செய்தல் (Absorption), தேகத்திற்குத் தேவையான ‘சுரப்புகளை’ நிறைத்துத் தருதல் (Secretion) எல்லாவற்றையும் நீர் வடிவாகவே தண்ணீர் செய்து தருகிறது.

அத்துடன் நில்லாது, நுரையீரலின் அடிப்பாகத்தை ஈரமாக வைத்திருப்பதுடன், உயிரிக்காற்றை கொள்வதும், கரியமில வாயுவை விட்டு விடுவதும் போன்று செயல்கள் துரிதமாகவும் தரமாகவும் நடைபெற வாய்ப்பளிக்கிறது.

உடல் முழுவதிலும் உஷ்ணமானது சீராக பரவியிருக்க வகை செய்வதுடன், அதிக உஷ்ணம் உடலில் ஏற்பட்டால் அதனை நீராவி மூலம் வெளிப்படுத்தி விடும் வேலையையும் தண்ணீர் செய்து தருகிறது.

உடலுக்குச் செல்கின்ற சத்துப் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல உதவும் வாகனமாகவும் தண்ணீர் உதவுகிறது.