பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




இன்னும் முக்கியமான ஒன்று, மூளைக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படாத வகையில் மெத்தை போன்று (Cushion) நீர் அரண் இருக்கிறது. முதுகுத் தண்டுக்கும் இது இதமான மெத்தையாக இருந்து பாதுகாக்கிறது.

இவ்வளவு முக்கியமான தண்ணீரை, ஒருவர் எவ்வளவு தான் குடிக்கலாம் என்றால், அது அவர் வாழ்கின்ற வெட்ப தட்ப சூழ்நிலையைப் பொறுத்தும், செய்கின்ற வேலையைப் பொறுத்தும் அமைகிறது.

ஒரு நாளைக்குக் குறைந்தது 8 டம்ளர் தண்ணிர் குடிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனென்றால், ஒரு நாளைக்குள் நுரையீரல் மூலம், ஜீரணம் மூலம், வியர்வை மூலம், சிறு நீர்க்கழிவு ஆகிய நான்கு வகைகளில் நீரளவு உடலில் குறைகிறது.

அதுவும் அதிகம் வேலை செய்யும் போது மேலும் குறைகிறது. ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால், அவர் தேகத்திற்குத் தண்ணிர் தேவை என்பதே அர்த்தமாகும். அதிகமாக தண்ணிர் குடிப்பது Kidney நலத்திற்கு மிகவும் தேவையாகும்.

2. சுண்ணாம்புச் சத்து (calcium)

இந்த கால்சியச் சத்தானது இதயத் துடிப்பை சமநிலைப்படுத்தித் தொடர்ந்து சீராக செயல்பட உதவுகிறது. இரத்தத்தின் உறைவுக்கு (Clotting) உதவுகிறது. நரம்புகளை நன்கு பராமரித்துக் காக்க உதவுகிறது.