பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

42




நாம் எவ்வளவு சாப்பிடலாம்!

ஒருவர் எந்த அளவுக்கு சாப்பிடலாம் என்பதை திட்ட வட்டமாக யாரும் கூறவில்லை. கூறவும் முடியவில்லை.

ஒருவருக்கு எவ்வளவு பசியிருக்கிறது? அவருக்கு எந்த அளவுக்கு உணவு பிடித்திருக்கிறது ? ருசியாக இருக்கிறது? என்பதைப் பொறுத்தே உணவின் அளவு அமைகிறது.

உயிர் வாழ்வதற்காக உணவு, உடல் நலமாக வாழ உணவு, அன்றாடம் வேலைகளைத் திறம்படச் செய்ய உணவு என மூன்று வகையாக உணவு உட்கொள்வதைப் பகுத்துக் காட்டுவார்கள்.

ஒருவருடைய வயது, அவர் வாழ்கிற சுற்றுப்புற சூழ்நிலை, அவர் எத்தகைய வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அவர் வாழும் சீதோஷ்ண நிலை என்ன என்பதைப் பொறுத்தே உணவின் அளவு அமைகிறது.

குளிர் பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிகமான அளவு உணவை உட்கொள்கிறார்கள். அப்பொழுது தான் உடல் நிலையில் உஷ்ணநிலை சரியாக எழ உதவும்.

வெப்பப் பிரதேசங்களில் வாழ்பவருக்கு அவ்வளவு அதிகமாக உணவு ஏற்காது.

கடினமான உடலுழைப்புச் செய்பவர்கள் உண்ணும் அளவை விட, மூளை வேலை செய்பவர்களுக்கு உணவின் அளவு குறையும்.