பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




எவ்வளவு ஒருவர் சாப்பிடலாம் என்பதைக் கண்டறிய ஒரு பேராசிரியர் முனைந்தார். இத்தாலிய நாட்டைச் சேர்ந்த அவரது பெயர் சாங்க்டோரியஸ். பதினாறாம் நூற்றாண்டில் அவர் செய்த ஆராய்ச்சியைப் படியுங்கள். மிக வேடிக்கையாக இருக்கும்.

அவர் ஒரு நாற்காலியில் சமநிலைப் பலகை (Seasaw) ஒன்றை வைத்து, அதில் அவர் ஒரு புறத்தில் அமர்ந்து கொண்டு, எதிர்ப்புற மூலையில் அவரது எடைக்குரிய அளவுக்கு பொருளை வைத்து சமமாக வைத்திருப்பார். பிறகு உணவை சாப்பிடத் தொடங்குவார்.

சாப்பிடத் தொடங்கியதும் இவர் அமர்ந்திருக்கும் பக்கம் கனமாகத் தொடங்கி கீழ்ப்புறம் சரிய ஆரம்பிக்கும். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் தான் சாப்பிடுகிற அளவை அறிந்து, உடனே சாப்பிடுவதை நிறுத்தி விடுவார். பிறகு குறிப்பிட்ட ஒரு எடையை வைத்து, எந்த அளவு என்பதைக் கண்டறிவாராம்.

அந்த நிலைமாறி இன்று உணவுப் பொருட்களின் சத்தை அறிந்து வைத்துக் கொண்டு, அதை கலோரி அளவு மூலம் கூறத் தொடங்கிவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

கலோரி என்றால் என்ன? ஒரு கிலோகிராம் (2.2 பவுண்டு) தண்ணிரை ஒரு டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு உஷ்ணப் படுத்தக் கூடிய அளவு தான் 1 கலோரியாகும். கிராமில் 119 பகுதி கொழுப்புச் சத்து 1 கலோரி அளவை உடையது. கிராமில் 1/4 பகுதி புரோட்டின் அல்லது கார்போஹைடிரேட்டு ஒரு கலோரி அளவை உடையது.