பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

44



தனிப்பட்ட ஒவ்வொருவரும் எத்தனை கலோரி உணவு சாப்பிடலாம் என்றும் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றார்கள்.

சராசரியான 150 பவுண்டு எடையுள்ள மனிதன் தூங்கும் போது 1 மணிக்கு 65 கலோரி செலவாகிறது. கடினமான வேலைகளைச் செய்யும் போது மணிக்கு 240 கலோரி செலவாகிறது. நடக்கும் போது, நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது ஒரு மணிக்கு 135 கலோரி செலவாகிறது என்று கணக்கிட்டு அவருக்கு உணவில் 3520 கலோரி ஒரு நாளைக்கு வேண்டும் என்று கூறுவார்கள்.

அமெரிக்க இராணுவ வீரனுக்கு ஒரு நாளைக்கு 4500 கலோரிகள். ஜெர்மன் தொழிற்சாலை வேலையாளுக்கு 4000 கலோரிகள், பெல்ஜியம் நாட்டில் 3400 கலோரிகள்.இப்படியாக நாட்டுக்கு நாடு அளவு வேறுபடுகிறது.

இந்திய நாட்டில் 2500 கலோரி அளவு தான் ஒருவருக்கு உணவு கிடைக்கிறது.

இதையெல்லாம் ஏன் இங்கு எழுதுகிறோம் என்றால், சரிவிகித உணவு என்பதைக் குறித்துக் காட்டத்தான்.

அதற்கு ஒரு வாய்ப்பாட்டையே ஒரு அமெரிக்க ஸ்தாபனம் உங்கள் உடல் நலமாகவும் வளமாகவும் வாழ நீங்கள் செய்யும் உணவுக்கான செலவை கீழ்கண்டவாறு பிரித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது.

நீங்கள் உணவுக்காக மொத்த 5 பங்கு செலவு செய்கிறீர்கள் என்றால்.