பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




1 பங்கு - காய்கறிகள், பழங்களுக்காக

1 பங்கு - பால், மோர், வெண்ணெய்,நெய்க்காக

1 பங்கு - மாமிசம், மீன், முட்டைக்காக

1 பங்கு - தானிய வகைகளுக்காக

1 பங்கு - கொழுப்பு, சர்க்கரை போன்றவைகளுக்காக

இப்படி சீராக உணவு வகைகளைத் தெளிவு செய்து சிறப்போடு உண்டு வந்தால் தான், உடல் எடுப்பாகவும் நிறைவாகவும் இருக்கும்.

ஆனால் ஊளைச்சதை, தொந்தி, போன்ற வேண்டாத சதைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வில் திண்டாடி வாழக்கூடாது என்று தான், விஞ்ஞானிகள் உடலுக்கு எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று கணக்கிட்டிருக்கின்றார்கள்.

இனி ஒருவருக்கு உடலின் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.