பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

வயிற்றுப் பிரச்சினையில் தான், நமது வாழ்வே அடங்கிக் கிடக்கிறது.

வயிற்றில் பசி இருக்கும் வரை வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். முயற்சிகளும் பரபரப்பாக இருக்கும்.

வயிறு நிறைந்து விடுகிற வசதி வந்துவிட்ட பிறகு, மனிதர்களுக்கு தானாக அசதி வந்து விடுகிறது.

அந்த அசதி தான் நாகரீகத்தால் நன்கு முற்றுகையிடப்பட்டு, மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகிறது. இறுதியில், வாழ்வும் வயிறும் நாகரீகத்தால் நசுங்கிப் போய் விடுகின்றன. பசியோ வயிற்றை மிரட்டத்தான் செய்யும். உணவோ வயிற்றை உருட்டி மிரட்டி விரட்டி வேதனையடையச் செய்து விடுகிறது. அதாவது அதிகமான உணவினால்.

பணவசதி வாழ்வின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். ஆனால், அது வயிற்றைக் கணப்படுத்தும் வேலையைத்தான் செய்து விடுகிறது.

பெருந்தீனி, இடைவிடாத தீனி, சுவையான தீனி என்பதாக உணவு வயிற்றுக்குள் ஒடிக் கொண்டிருக்கும் போது, ஆறு போல் இருந்த சிறிய வயிறு, அகண்ட சமுத்திரமாக மாறிவிடுகிறது.

மரம் போல் நிமிர்ந்து நின்ற தேகம், மலைபோல் பெருத்து சரிந்து விடுகிறது.