பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்




உங்கள் எடை இப்படித்தான் இவ்வளவு தான் என்று தெரிந்து கொண்டோம். ஆனால் அது பற்றிய சிறப்பான விவரங்களை சற்று கூடுதலாகத் தெரிந்து வைத்துக் கொள்வோமே!

அதிக எடை (Over Weight)

தேவைக்கு மேலே தேகத்தில் அதிக எடையை சுமந்து கொண்டு நடமாடுவது, ஒருவரின் உடல் திறனைப் பாதிக்கிறது. உடலின் நலனைக் குறைக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது சமூக வாழ்க்கையில் சங்கடத்தை உண்டுபண்ணி, பொருளாதார ஈட்டலிலும் புரண்டு வழிமறித்து பிரளயத்தை உண்டு பண்ணி விடுகிறது.

உடல் எடை என்பது கொழுப்பு, தசை, எலும்பு என்னும் இந்த மூன்றினாலும் முழுமையாக உண்டாக்கப்படுகிறது.

உடலில் கொஞ்சம் கூடுதலான தசை இருந்து விட்டாலும் பாதகமில்லை. கொஞ்சம் கூடுதலான கொழுப்பு வந்து விட்டாலே கொஞ்சம் கஷ்டமான ஜீவனந்தான்.

நீங்கள் அதிக எடையுடன் இருக்கிறீர்கள் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

நீங்கள் மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள். இயல்பாக எந்தவித விறைப்புத் தன்மையும் இல்லாமல், ஒய்வாக (Relax) இருப்பது போல் படுத்துக் கொள்ளுங்கள்.

நெஞ்சிலுள்ள விலா எலும்புகள் முன்பகுதி நெஞ்செலும்புகளுக்கு உட்பட்டு வயிற்றுப்பகுதி உள்ளடங்கி இருந்தால்