பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

54




இப்படி வளர்சிதை மாற்றம் நிகழ்வதற்கு உடலில் உள்ளே ஊறுகின்ற ஹார்மோன் சுரப்பிகள் மற்றும் என்சைம்கள் உதவுகின்றன. இவ்வாறு இயற்கையில் நிகழும் இச்செயல்கள் நோயின் காரணமாக அல்லது இதனை ஆற்றுகின்ற பிட்யூட்டரி தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப் படுவதன் காரணமாக செயல் வேகம் குறைந்து போகின்றன.

இத்தகைய பிட்யூட்டரி தைராய்டு சுரப்பிகளின் தவறான அல்லது தாமதமான செயல்முறைகளில் ஒருவர் அதிக எடையுடன் விளங்கலாம். அல்லது தேவைக்கும் குறைவான எடையுடன் இருக்கலாம். அதிகப்படும் போது தான் எதிர்பாராதவை நடக்கின்றன.

இரண்டாவது காரணமாக அமைந்திருப்பது தவறான உணவு உட்கொள்ளும் முறை.

மனிதருக்குப் பசி ஏற்படுவது இயற்கையான உணர்வு தான். ஆனால் பசியை பாதகப்படுத்துவது போல, உணவு உட்கொள்ளுவது தான் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

மூளையின் ஒரு சிறு பகுதியில், பசியை ஏற்படுத்தும் ஒரு சிறிய மையம் (Appetite centre) இருக்கிறது

இந்த சிறு மையத்திற்குள் இரண்டு வகையான மூளை செல்கள் இருக்கின்றன. இவைகளின் பெயர் நியுகிளி (Nuclei).

இரண்டு வகைகளில் ஒரு வகையான மூளைசெல்கள் பசி உணர்வை ஏற்படுத்தி, அவரை உண்ண செய்கின்றன.