பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




இன்னொரு வகையான மூளைச் செல்கள் மீண்டும் ஒருவித உணர்வை ஏற்படுத்தி, (பசி தீர்ந்த நிலையான) திருப்தியை ஏற்படுத்தச் செய்கின்றன.

இந்த செல்கள், இடம், காலம், தட்பவெப்பம், உழைப்பு போன்றவற்றிற்கு ஏற்றவாறு இத்தகைய பசி திருப்தி உணர்வுகளை உண்டு பண்ணுகின்றன.

இந்த செல்கள் எப்படி இவ்வாறு செயல்படுகின்றன என்பதை விஞ்ஞானிகளும் முயன்று பார்த்து அறியும் முயற்சியில் சற்றுப் பின்னடைந்துதான் இருக்கின்றனர்.

இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுக்கு ஏற்ப, உடல் உஷ்ணநிலைக்கேற்ப, அல்லது இரத்தத்தில் ஏற்பட்டிருக்கும் அமினோ ஆசிட் அளவுக்கு ஏற்ப, இந்த செல்கள் இயக்கப்படுகின்றன என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால் இந்தப் பசி ஊட்டும் மையத்திற்கும், மூளையின் மேலுறைப் பகுதிக்கும் நரம்புகள் மூலம் தொடர்பு இருக்கின்றன என்பதை மட்டும் விஞ்ஞானிகள் அறிந்திருக்கின்றனர்.

ஆகவே, பசியானது உடல் இயக்கச் செல்களின் மூலமாகவும் மூளையின் உணர்வுபூர்வமான செயலாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

எனவே, ஒருவர் தனக்குப் பசி ஏற்படும் பொழுது அதனை தீர்த்து வைக்க எவ்வளவு உணவு போதுமானது என்பதைப் புரிந்து கொள்ளவும், அளவை நிர்ணயப்படுத்திக் கொள்ளவம் முடியம். அப்படிப்பட்ட திருப்தி உணர்வு