பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




உடலே ஒரு மாதிரியான மாற்றத்திற்கும், பொலிவற்ற தோற்றத்திற்கும் ஆளாகிப் போய்விடுவது தான்.

இரட்டை நாடி சரீரம் என்பார்கள். அதாவது தாடையில் இரண்டு மடிப்புகள் ஏற்பட்டுத் தொங்கும் (Double Chin).

புஜத்தின் மேற்பகுதியான மேற்கை, தொளதொள வென்று தொங்கித் தோன்றும்.

பெண்களுக்கோ மார்பு சரிந்துபோய் தொங்கும் மார்புகளாய் மாறிப் போகும்.

வயிறோ விரும்பாத அளவிற்கு விரிந்து பல புறங்களிலும் சரியும்.

தொடைத் தசைகள் உருவத்தில் பெரிதாகி நடக்கும் போது ஒன்றுக்கொன்று உரசிக் கொண்டு, எரிச்சலை உண்டு பண்ணும்.

தட்டையான பாதங்கள் (Flat Feet) வரும். சாய்ந்து சரிந்து நடக்கச் செய்யும்.

பெருமூச்சு வரும். பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாக்கும்.

இவை மட்டுமா? இன்னும் பல நோய்களும் ஏற்படும்.