பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

டாக்டா. எஸ். நவராஜ் செல்லையா


மார்பிலும், மார்பைச் சுற்றிலும் கனமான சதைகளை அவர்கள் தாங்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் சுவாசிப் பதற்காக அதிகப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவர்கள் சுவாசித்து வெளியிடும் இயக்கத்தையே மிகவும் சிரமப்பட்டே செய்ய வேண்டியிருக்கிறது. அதை அவர்கள் பெருமூச்சு விடுவது போலவே செய்கிறார்கள். அவர்கள் உடலில் உண்டாகும் கரியமில வாயுவை, விரைவில் தேகத்தை விட்டு வெளியேற்றாமல், சிரமப்பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாக அகற்றுவதால், சுவாசக் கோளாறுகள் சடுதியாக உண்டாகின்றன.

2. இதய நோய்கள் : சாதாரண தேகத்திற்கு, இரத்தத்தை இறைத்து விடும் வேலையை, இதயம் எளிதாகச் செய்து விடுகிறது. ஒரு முறை இதயம் சுருங்கி இரத்தத்தை இறைத்து, உடல் முழுவதிலும் ஒடச் செய்கின்ற பாங்கு, ஊளைச்சதையுள்ள தேகத்தில் செய்திட முடிவதில்லை.

இதயம் ஒரு முறைக்கு இரண்டு முறை இறைக்க வேண்டியிருக்கிறது. உழைக்க வேண்டியிருக்கிறது.இதனால் இதயத்திற்குக் கூடுதலான வேலை. குறைக்க முடியாத கஷ்டம். சிரமத்திற்கு மேல் சிரமம்.

இதனால் இரத்த ஓட்டத்திற்கு வேகம் இல்லை. இரத்த அழுத்தம் ஏற்பட்டுப் போகிறது. இரத்தக் குழாய்கள் தடித்துக் கொள்வதால், இரத்த ஓட்டத்திலும் பாய்ச்சல் இல்லை.