பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



8. நரம்புகள் புடைத்துக் கொண்டு, தோலுக்கு மேல் தோன்றித் தெரியும் விரிந்த நரம்பு நோய்களும் உண்டாகும்.

9. மூட்டுகளில் வலி தோன்றும். மூட்டுப் பிடிப்பு, மூட்டுவலி போன்ற நோய்களும் அதிக அளவில் வரும்.

10. பெண்களுக்குப் பிரசவ காலத்தில் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். குழந்தை பிறப்பிலும் குறுக்கிட்டு கேடுகள் விளைவிக்கும்.

11. உடம்பின் உட்புறத்திலுள்ள முக்கிய உறுப்புக்களைச் சுற்றிக் கொழுப்புத் திசுக்களைப் படரவிட்டு, அவற்றை நெருக்கி, முற்றுகையிடுவது போன்று மூடும் நிலையை உண்டாக்குவதால், உயிரூட்டும் அந்ததுடிப்புள்ள உறுப்புக்கள் திக்கித் திண்டாடிப் போகின்றன. அதனால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அசாதாரண நிலையும் ஏற்படுகிறது.

12. தாங்க முடியாத உடல் சுமை காரணமாக குடற்பிதுக்க நோய் அல்லது அண்டவாதம் (Hernia) கூட ஏற்பட்டு விடுகிறது.

ஊளைச்சதை உள்ளவர்கள் அடிக்கடி தங்களுக்குக் களைப்பாக இருக்கின்ற உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது என்று முறையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் அநாவசியமான எடையை சுமக்கும் முயற்சியில் அதிகமாக ஈடுபட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஆயாசமே அது.