பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ஊளைச்சதையும் விரட்டும் முயற்சியும்


ஊளைச் சதையானது காலங்காலமாக மனித இனத்தின் வாழ்வோடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது, என்றாலும், அவை பற்றிய ஆராய்ச்சியை சமீப காலம் வரை (Till the fifties) எந்த விஞ்ஞானியும் மேற்கொள்ளவில்லை.

1970ம் ஆண்டுக்குப் பிறகே, இந்த ஆராய்ச்சியில் ஒரு வேகம் எழுந்தது. இந்த உபாதை நிறைந்த ஊளைச் சதைகள். மனிதர்களுக்கு மனப்படபடப்பு (Hypertension), நீரிழிவு நோய், நரம்புத் தாக்குதல் (Stroke), மாரடைப்பு போன்ற நோய்களைத் தந்து நோகடித்துக் கொல்கின்றன எனும் கொடுமையைக் கண்டறிந்த பின், இவற்றை எப்படி ஒட்டுவது, ஒழிப்பது என்ற கேள்விக்கு பலர் விடை காண முயன்றனர்.

ஊளைச்சதைகளை ஒழிக்க ஒரேவழி உடம்பில் ஒல்லியாக மாறுவதுதான் ( slimming) என்ற முடிவுக்கு வந்தனர்.

உடல் எடையில் குறைவது, கொழுப்பைக் கரைப்பது எனும் இரண்டு வழிகள் தான் இதில் உள்ளன என்று கண்டனர்.