பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அதற்காக, ஊளைச்சதை உள்ளவர்கள் அதிக சக்தியுள்ள உணவு வகைகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்.

மற்றொன்று, உடலில் அதிக வெப்பம் ஏற்படுவது போல உழைத்து, உடல் கொழுப்பைக் கரைக்க வேண்டும் என்றனர்.

ஒரு சிலர் தனக்கு ஊளைச்சதையில்லை. அதிக எடை தான் உள்ளது என்று ஆறுதல் கூறிக் கொள்வதும் உண்டு. அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிக எடை என்பது உடல் தோரணையை மாற்றாது. ஆனால் ஊளைச்சதை என்பது உடல் அழகையே மாற்றி அழகற்றதாக்கி விடும்.

சதைக்ளைக் குறைக்கலாம் என்றால் எப்படி குறைப்பது? எவ்வளவு குறைப்பது என்பது தான் முக்கியம்.

ஜீன்மேயர் என்ற அமெரிக்க உடற்பயிற்சி மேதை கூறுகிறார். ‘ஒரு பயிற்சி செய்து விட்டு, 1 பவுண்டு குறையும் என்று எதிர்பார்ப்பது தவறான ஆசை. அப்படிக் குறைவதும் தவறு.

ஒரு மணி நேரம் அல்லது 11/2 மணிநேரம் இறகுப் பந்து போன்ற ஆட்டங்களை ஆடிக்கொண்டே வந்தால், ஆண்டு இறுதியில் ஒரு 19 பவுண்டு எடை குறைந்து போவதற்கு சமமாகும்.’

ஆகவே எடையைக் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும் என்பது தான் நியாயமான மரபாகும்.