பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இருப்பதன் மூலம் உடல் கொழுப்பைக் கரைத்து விடலாம் என்று எல்லோரும் மனப்பால் குடிக்கின்றார்கள். அதற்காக 28 நாள் என்று கணக்கு போட்டு, சாப்பாடு குறைப்பு சம்பிரதாயத்தையும் கடைபிடிக் கின்றார்கள்.

அந்த 4 வார விரதத்தில், முதல் வாரத்தில் 3.5 கிலோ கிராம் எடை குறைகிறது. அதற்காக அவர்கள் ஆனந்தப் படுவதில் அர்த்தமே இல்லை. அவர் உடல் முதலில் இழப்பது சோடியம் என்ற சத்தையும் தண்ணிர் அளவையும் தான். மிக முக்கியமான புரோட்டின் சத்தும், கிளைகோஜன் சத்தும் தான் கரைந்திருக்கின்றன. இரண்டு வாரத்தின் முடிவில் தண்ணின் அளவும், புரோட்டின் சத்தும் தான் கரைந்திருக்கின்றனவே தவிர, கொழுப்புப் பகுதிகள் அப்படியே அசையாமல் தான் கரைகட்டிக் கொண்டு கிடக்கின்றன.

கொழுப்புள்ள மனிதர் தன் கொழுப்பைக் கரைக்க முயல்கிறார் என்றால், அந்த மாற்றம் மிக மிக நிதான மாகவே நிகழ்கிறது. அவர் தான் சேகரித்து வைத்திருக்கும் கொழுப்பைக் கரைக்க அதன் அளவைச் சுருக்க கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் ஆகலாம்.

ஆனால், மிகவும் முயற்சி செய்கிற ஒரு தசை மனிதர் குறைந்த காலத்தில் 5 கிலோகிராம் கொழுப்பைக் குறைத்திடலாம். இது தற்காலிகமான வெற்றி தான். காலப்போக்கில் அது மிகவும் கஷ்டமான காரியமாகவே அமைந்து விடுகிறது.