பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

72



ஊளைச்சதை உள்ளவர்களுக்கு உடலுறவு வேகத்தில் ஒழுங்கின்மை, வலுவற்ற எலும்புகள், பலமற்ற தசைகள், அதிகக் கொழுப்புச்சத்து. சுறுசுறுப்பற்ற ஈரல் மற்றும் இரத்தச் சர்க்கரை இன்மை அல்லது மிகுதி என்பன போன்ற நோய்கள் தோன்றாத் துணையாக இருந்து தொடர்ந்து வரும்.

அதனால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக, உணவு வகையில் பத்தியம் கடைபிடிப்பதற்கு முன்பாக, மருத்துவரிடம் உடம்பை சோதனை செய்து, அதற்கேற்ற அறிவுரையின்படி நடந்து கொள்ள வேண்டும்.

உணவு பத்தியம் என்றால், உணவையே உண்ணாமல் பட்டினி கிடப்பது என்பது அல்ல.

உண்ணும் உணவு வகைகளில் கொழுப்புச் சக்தியைக் கொடுக்கும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது தான். அதற்காக மாத்திரைகளாக சாப்பிடலாம், என்று கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடவே கூடாது.

இவர்களுக்குப் பலமான உடற்பயிற்சிகளும் ஒத்து வராது. சிறுவர்கள் என்றால், அவர்களை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து கொண்டால், எளிதில் எடையைக் குறைத்து வெற்றி காணலாம்.

வயதானவர்கள் என்றால் முதலில் அவர்களுக்கு ஊளைச் சதை என்ன என்பது பற்றி போதனை செய்து, அறிவுறுத்திட வேண்டும்.