பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


படுவது போல் செய்து, மீண்டும் முதல் நிலைக்கு வந்து, அதன் பின் மூச்சை விடவும். 10 முறை செய்க.

குறிப்பு : தலையை ஒருபுறமாக சுழற்றிக் கொண்டு ஒரு முழுசுற்று சுற்றி வந்தவுடன், தலை சுற்றுவது போல் இருக்கும். உடனே எதிர்புறமாக முன்போல் தலையை சுற்றினால் மயக்கம் போய்விடும்.

மேற்கூறிய பயிற்சிகள் கழுத்து, தோள் பகுதிகள் வலிமையாவதற்கான பயிற்சிகளாகும். பலமுறை செய்து பயன்பெறுக.

கீழ்க்காணும் பயிற்சிகள் மார்புப் பகுதிகளுக்கானவையாகும்.

5. (1) கால்களை சேர்த்து வைத்து, உடலை விறைப்பாக நிறுத்தி நேராக நிமிர்ந்து நின்று கைகள் இரண்டையும் வணங்குவது போல, மார்புக்கு முன்புறம் 6 அங்குல தூரத்தில் குவித்து (உள்ளங்கைகளை) நிற்கவும்.

2. நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, தோள்களுக்கு இணையாக இரண்டு கைகளையும் மார்பை நோக்கி அழுத்தவும். சில நொடிகள் அப்படியே அழுத்தியபடி இருந்து பழைய நிலைக்கு வந்தபிறகு மூச்சினை விடவும்.

6. (1) கால்களை சேர்த்து வைத்து, நிமிர்ந்து நேராக நின்று, கைகளை தோள்களின் மீது வைத்துக் கொண்டு நிற்கவும்.